நடப்பு டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி, புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு மோசமான சரிவை சந்தித்து வருகிறது.

தற்போதைய சுற்றுப்பயணத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்திடம் மூன்று தோல்விகளைச் சந்தித்துள்ள இந்திய அணி, இதுவரை ஒரு போட்டியில் கூட 200 ரன்களை எட்ட முடியாமல் திணறி வருகிறது. இந்திய இந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதே முக்கியக் குறைபாடு என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் விளையாடிய முதல் 7 பேட்ஸ்மேன்களில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரைத் தவிர அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சிவம் துபே, திலக் வர்மா மற்றும் அக்சர் படேல் என 6 பேர் ஆட்டக்காரர்களாக களமிறங்கியது அணியின் சமநிலையைப் பாதித்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

இதற்குத் தீர்வாக, அஜித் அகர்கர் தலைமையிலான இந்தியத் தேர்வுக் குழு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பாடிதாரை உடனடியாக அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் 33வயதான பாடிதார், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2026 சீசனில் 14 இன்னிங்ஸ்களில் அதிக ரன்களைக் குவித்து, ஆர்சிபி அணிக்குத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பட்டத்தையும் வென்று கொடுத்து மாஸ் காட்டியுள்ளார்.

 

“>

கடந்த நான்கு ஐபிஎல் சீசன்களிலும் தலா 300 ரன்களுக்கு மேல் குவித்த போதிலும், பாடிதாருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் நிறைய நேரம் இருப்பதால், இந்திய அணி பாடிதாரை மிடில் ஆர்டரில் களம் இறக்கிப் பரிசோதனை செய்து பார்க்க இதுவே சரியான தருணம் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.