அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஊழியர்களிடம், அங்கிருந்த ஹியூமனாய்டு (Humanoid) ரோபோட் ஒன்று திடீரென ஆக்ரோஷமாக சண்டைக்குப் பாய்வது போன்ற நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் சும்மா காட்டுத்தீ போல பரவி உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில், “Made in China” என்ற லேபிளுடன் இருக்கும் ஒரு அதிநவீன ரோபோட், அங்கிருந்த ஆபீஸ் ஊழியர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போதே திடீரென எதிர்பாராத விதமாக பயங்கரமான அசைவுகளுடன் அவர்களைத் தாக்க முற்படுவது போல நடந்து கொள்கிறது.

பெற்றுக்கொண்ட கமாண்டுகளுக்கு வேலை செய்யாமல், திடீரென அந்த ரோபோட் ஊழியர்களை நோக்கி, “ஏலேய்.. நீ வேணா சண்டைக்கு வாடா!..” என்கிற ரேஞ்சுக்கு ஆக்ரோஷமாக கைகளை நீட்டி வம்புக்கிழுக்கும் இந்த காட்சி பார்ப்போரை மிரள வைத்துள்ளது.

​இந்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருவதைத் தொடர்ந்து, இது உண்மையிலேயே ரோபோட்டின் தொழில்நுட்பக் கோளாறா (Malfunction) அல்லது சோஷியல் மீடியா லைக்குகளுக்காக எடிட் செய்யப்பட்ட வீடியோவா என்ற விவாதம் நெட்டிசன்களிடையே எகிறியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Alert Wire India (@alertwireindia)

<script async src=”//www.instagram.com/embed.js”></script>

இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை இன்னும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையிலும், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையின் அசுர வளர்ச்சி மனிதர்களின் பாதுகாப்பிற்கு எந்தளவுக்கு அச்சுறுத்தலாக மாறும் என்ற அச்சத்தை இந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.