கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வேலைக்கு வராத கோபத்தில் மெடிக்கல் கடை பெண் உரிமையாளர் ஒருவர், தனது ஊழியரின் வீட்டிற்குச் சென்று வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் அன்று வேலைக்குச் செல்லாமல் விடுப்பு (Leave) எடுத்துள்ளார்.

இதனால் கடுமையான ஆத்திரமடைந்த அந்த மெடிக்கல் கடை உரிமையாளர், “நான் உனக்கு இவ்வளவு சம்பளம் தருகிறேன், வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலைக்கு வரமாட்டாயா?” என்று ஆக்ரோஷமாக டயலாக் பேசிக்கொண்டே நேரடியாக அந்த ஊழியரின் வீட்டிற்கே படையெடுத்துள்ளார். அங்கு சென்றவர் சாதாரணமாக எச்சரிக்காமல், கையில் கிடைத்த கருங்கற்களை எடுத்து ஊழியரின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை “சில்லு சில்லாக” அடித்து உடைத்துத் தனது வெறியைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

கண்ணாடியை உடைத்தது மட்டுமின்றி, அங்கிருந்த ஊழியரை நோக்கிக் கருங்கற்களைத் தூக்கி வீசி அவரைக் கொடூரமாகத் தாக்க முற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த முதலாளியின் செயலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

வேலைக்கு வராத கோவம் – கல்லால கண்ணாடிக்கு வைத்தியம் 🤦‍♀️

எங்க குமரி மாவட்டதுல கருங்கல் ஊர் பக்கம் நடந்த கூத்து

வேலைக்கு வரலைனு மெடிக்கல் கடை ஓனர் அக்காவுக்கு BP எகிறிட்டுது போல.

"நான் இவ்ளோ சம்பளம் தாரேன், நீ லீவு போடுறியா?"னு டயலாக் விட்டுட்டு நேரா வேலைக்காரி வீட்டுக்கு… pic.twitter.com/aRMMDwXYXr
— Kᴀʙᴇᴇʀ – தக்கலை கபீர் (@Autokabeer) July 4, 2026

“ஒரு ஊழியர் வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளத்தைக் குறைக்கலாம் அல்லது வேலையை விட்டு நீக்கலாம்; அதை விடுத்து வீடு தேடிச் சென்று இப்படி ரௌடித்தனம் செய்வதா?” என்று கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், ‘மருந்து விற்க வேண்டிய ஆள், இப்போது கல்லால் கண்ணாடி உடைக்கும் தெரபி செய்து கொண்டிருக்கிறார்’ என நக்கலாகவும், அதே வேளையில் இந்த அராஜகத்தில் ஈடுபட்ட பெண் மீது காவல் துறை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.