Omegle போன்ற ஆன்லைன் தளங்களில் முன்பின் தெரியாதவர்களுடன் ரேண்டமாக வீடியோ காலில் பேசி, அதை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து சமூக வலைத்தளங்களில் கன்டென்டாகப் பதிவிடும் கலாச்சாரம் தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
இந்த வகையான வீடியோக்களில் பல கிரியேட்டர்கள் பெண்களிடம் எல்லை மீறி ஃபிளர்ட் செய்வது, முகஞ்சுளிக்க வைக்கும் கேள்விகளைக் கேட்பது அல்லது வினோதமான கேம்களை விளையாடுவது என வியூஸ்காகப் பல விஷயங்களைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியப் பெண்மணி ஒருவர் வெளிநாட்டு இளைஞர் ஒருவருடன் ரேண்டம் வீடியோ காலில் பேசும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி, இந்திய நெட்டிசன்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய விவாதத்தையும் அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், அந்த வெளிநாட்டு இளைஞர் இந்தியப் பெண்மணியிடம் அவரது ‘பாடி கவுண்ட்’ எத்தனை பேருடன் உடலுறவு வைத்திருக்கிறார் குறித்துக் கேட்டுள்ளார்.
அதற்கு அந்தப் பெண்மணி சற்றும் யோசிக்காமல், மிகவும் சாதாரணமாகச் சிரித்துக் கொண்டே “20 பேர்” என்று பெருமையுடன் பதிலளித்துள்ளார். மேற்கத்திய கலாச்சாரக் கேள்விகளுக்குப் பின்தொடர்ந்து, இந்தியப் பெண் ஒருவர் இப்படிப் பகிரங்கமாகப் பேசியிருப்பது இந்திய இளைஞர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
A 21-year-old Indian feminist recently revealed she has a body count of 20.
It makes me wonder, what is happening to our traditional Indian values? pic.twitter.com/3NRzUfvztr
— Sharroh (@Sharroh45) July 4, 2026
“>
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவரவர் விருப்பம் என்றாலும், ஒழுக்கக்கேடான விஷயங்களை இப்படிப் பொதுவெளியில் பெருமை போலப் பேசுவதற்கு இதில் என்ன இருக்கிறது? இது நமது கலாச்சாரச் சீரழிவையே காட்டுகிறது” என்று நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டனங்களையும் அதிருப்தியையும் கமெண்ட்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.
