பலோத்ரா (ராஜஸ்தான்):

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது நாட்டின் தற்சார்பு உற்பத்தி குறித்துப் பேசிய அவர், எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் உற்பத்தியில் இந்தியா அடைந்துள்ள அபார வளர்ச்சியைப் பட்டியலிட்டார்.

​தற்போது இந்தியா தனது தேவைக்கான எல்.பி.ஜி எரிவாயுவில் சுமார் 60%-ஐ வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் உள்நாட்டு உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியா சராசரியாக 35,000 மெட்ரிக் டன் மட்டுமே எல்.பி.ஜி-யை உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடி காலத்திலும் சவால்களை முறியடித்து, உள்நாட்டு உற்பத்தியை 54,000 மெட்ரிக் டன் ஆக அதிரடியாக உயர்த்தியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

​ராஜஸ்தானின் பாச்பத்ராவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அதிநவீன ஒருங்கிணைந்த ‘கீரின்ஃபீல்டு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வளாகத்தை’ (Greenfield Integrated Refinery-cum-Petrochemical Complex) நாட்டிற்கு அர்ப்பணித்த பின் இந்த அதிரடி அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். இந்த புதிய ஆலை மூலம் இந்தியாவின் எரிசக்தி தட்டுப்பாடு நீங்குவதோடு, வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையும் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.