மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டத்தில், திருமண பந்தத்தையே அசிங்கப்படுத்தும் விதமாக ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்திருக்கு. ஒரு பெண் தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, தன்னுடைய 3-வது கணவனைக் கொலை செய்துள்ளதாக போலீஸார் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று கல்யாணம் ஆகியிருந்த நிலையிலும், 4-வதாக இன்னொரு கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதற்காக, ஜூன் 27 மற்றும் 28ஆம் தேதி இரவில், ஹனுமான் வார்டு பகுதியில் வசித்து வந்த சரோஜ் மெஹ்ரா என்ற அந்தப் பெண், தன் கள்ளக்காதலன் மகேந்திர மெஹ்ரா மற்றும் அவனது நண்பன் விஷ்ணு ஆகியோருடன் சேர்ந்து, 3வது கணவனான துளசிராம் என்பவரைக் கொலை செய்துள்ளனர்.
போலீஸார் இந்த வழக்கை விசாரித்த போதுதான் பல ஷாக்கிங் உண்மைகள் வெளிவந்தன. சரோஜ் மெஹ்ராவுக்கு முதன்முதலில் 2004இல் கல்யாணம் நடந்ததும், அவரோடு செட் ஆகாமல் 2வது கல்யாணம் செய்ததும், அவர் இறந்த பிறகு 2006இல் துளசிராமுடன் 3வது கல்யாணம் நடந்ததும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், மகேந்திரனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால், அவனைக் கல்யாணம் செய்ய கணவனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர். தற்போது இந்த வழக்கில் பெண், கள்ளக்காதலன் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கணவன் துளசிராம் கொலை செய்யப்படும் போது சரோஜ் வீட்டில்தான் இருந்துள்ளார். ஆனால், கணவன் காணாமல் போன பிறகும் 3 நாட்களாக சரோஜ் போலீசில் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை, அவரைத் தேடவும் இல்லை. இதனால் எஸ்பி ரிஷிகேஷ் மீனாவுக்கு சரோஜ் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணை மற்றும் டெக்னிக்கல் ஆதாரங்கள் மூலமாக இந்த முழு சதித்திட்டமும் அம்பலமாகியுள்ளது.
இதற்கிடையே, தான் எந்தத் தப்பும் செய்யவில்லை என்றும், கள்ளக்காதலன் தன்னை அடைய வேண்டும் என்பதற்காகவே இதையெல்லாம் செய்தான் என்றும் சரோஜ் போலீஸாரிடம் கூறி தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், போலீஸாரின் பக்காவான ஆதாரங்களால் மூவரின் சதியும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேராசையும், வாழ்க்கையில் திருப்தி இல்லாத குணமும் ஒரு பெண்ணை எப்படிப்பட்ட கொடூரக் குற்றவாளியாக மாற்றியிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு பெரிய உதாரணம்.
