கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில், பள்ளி முடிந்து வந்த ஒரு சிறுமி, சாலையின் மறுபுறம் நின்றிருந்த தனது தாயைக் கண்டதும் எல்லையற்ற மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளார். அந்தப் பாச மிகுதியில், சாலையில் இருபுறமும் வாகனங்கள் வருகிறதா இல்லையா என்பதை சற்றும் கவனிக்காமல், அந்தப் பள்ளி மாணவி திடீரென சாலையைக் கடப்பதற்காக ஓடியுள்ளார். அப்போது அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஓடிவந்த அந்தச் சிறுமியின் மீது மோதும்படி வர டிரைவர் பிரேக் போட்டதால் குழந்தை உ
நூலிழையில் உயிர் தப்பிய மாணவி! – பதறவைக்கும் சிசிடிவி
கேரள மாநிலம் திருச்சூரில், தாயைக் கண்ட உற்சாகத்தில் சாலையை கவனிக்காமல் ஓடிய பள்ளி மாணவி, கார் மோதும் அபாயத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்.#Kerala #Thrissur #CCTV… pic.twitter.com/vcTWg3KTzu
— Thanthi TV (@ThanthiTV) July 3, 2026
யிர் தப்பியது.
தாயைக் கண்ட வேகத்தில் சாலையை கவனிக்காமல் ஓடியதால் நேர்ந்த இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளைச் சாலைகளில் தனியாக விடக் கூடாது என்ற மிகப்பெரிய விழிப்புணர்வையும், எச்சரிக்கையையும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
