டெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் இருநாடுகள் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பது சர்வதேச வர்த்தக வட்டாரத்திலும் சோசியல் மீடியா பக்கங்களிலும் மிகப்பெரிய புயலையும் மெகா வரவேற்பையுமே கிளப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில், குறிப்பாக ஏஐ (AI), செமிகண்டக்டர் (Semiconductor), அரிய பூமி தாதுக்கள் மற்றும் பாதுகாப்பு ஆகிய மிக முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே அக்மார்க் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்ம் கையெழுத்தாகியுள்ளன.

அதுமட்டுமில்லாமல், இந்த மெகா கூட்டணியின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் சுமார் 1,000 பயோ-கேஸ் மற்றும் இயற்கை உர ஆலைகளை அமைப்பதற்கும் ஜப்பான் அரசுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி, “இந்தியா முழுக்க 1,000 ஆலைகள் வந்தா நம்ம ஊர் இளைஞர்களுக்கு மெகா லெவலில் வேலைவாய்ப்பு கிடைக்கும் .. ஜப்பான் கூட வச்சிருக்க இந்தத் தொழில்நுட்பக் கூட்டணி நிஜமாவே ஒரு மாஸ் மூவ்!” என்று நெட்டிசன்கள் மத்தியில் இணையத்தில் அள்ளிக்கொட்டும் பாராட்டு கமெண்ட்டுகளுடன் இந்த நியூஸ் தாறுமாறாக விவாதிக்கப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.