“தவெக எம்எல்ஏவை விலைக்கு வாங்க ரூ.50 கோடி வரை பேரம் பேசியிருக்காங்க; குறுக்கு வழியில ஆட்சியைப் பிடிக்க திமுக செய்யுற இந்தச் சூழ்ச்சியெல்லாம் எங்ககிட்ட பலிக்காது!” என்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுக அரசை நோக்கிப் ஆக்ரோஷமாக பேசினார்.
மேடையில் பேசிய அவர், தங்களுக்குத் தேர்தலைக் கண்டு எந்தப் பயமும் இல்லை என்றும், தற்பொழுது மீண்டும் தேர்தல் வந்தால் கூட தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தவெக தனித்து நின்று வென்று காட்டும் என்றும் சவால் விடுத்தார்.
அதுமட்டுமில்லாமல், முதலமைச்சர் விஜய்யை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யவிடாமல் தடுக்கப் பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும், தவெக மாநாட்டில் செயற்கையான கூட்ட நெரிசலை உண்டாக்கிப் பெரிய விபத்தை ஏற்படுத்த திமுக தரப்பு முயற்சி செய்ததாகவும் ஆதவ் அர்ஜுனா மேடையில் அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசினார்.
