சமூக வலைதளங்களில் ‘ரீல்’மோகம் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. மழையினால் உருவான ரம்மியமான சூழலைப் பயன்படுத்தி வீடியோ எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவர், தனது உயிரைப் பணயம் வைத்து கவனக்குறைவாகச் செயல்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சாலையோரத்தில் நின்று அந்தப் பெண் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த பேருந்து ஒன்று அவர் அருகே மிக நெருக்கமாகக் கடந்து செல்கிறது. இதைக் கண்ட பார்வையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வீடியோ

“>

வெளியானதிலிருந்து, நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்காலிகப் புகழுக்காகவும், லைக்குகளுக்காகவும் இவ்வளவு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம்? என்றும், இதனால் பேருந்து ஓட்டுநருக்கும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக வேண்டும் என்ற வெறி, இத்தகைய கவனக்குறைவான செயல்களுக்கு வழிவகுப்பதையும், இது போன்ற ஆபத்தான பழக்கங்களை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்பதையும் இச்சம்பவம் உணர்த்துகிறது.