இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிடுபவர்களுக்கு, அந்தந்த நாடுகளின் பண மதிப்பு மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வியட்நாம், இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகள் பொதுவாக இந்தியப் பணத்திற்கு அதிக மதிப்புள்ள நாடுகளாக அறியப்பட்டாலும், அவற்றை விடவும் நம் நாட்டுப் பணத்திற்கு வியக்கத்தக்க வகையில் பல மடங்கு அதிக மதிப்பைத் தரும் நாடுதான் உஸ்பெகிஸ்தான்.

இந்த ஆசிய நாட்டில் இந்தியாவின் வெறும் 100 ரூபாய், அந்நாட்டின் நாணயமான உஸ்பெக் சோம் மதிப்பில் தோராயமாக 13,000 முதல் 15,000 சோம் வரை மாறுகிறது. இதன் காரணமாக, இந்தியச் சுற்றுலாப் பயணிகள் மிகக் குறைந்த பட்ஜெட்டிலேயே உஸ்பெகிஸ்தானில் ஒரு சொகுசான மற்றும் மறக்க முடியாத விடுமுறையைக் கழிக்க முடிகிறது.

இந்நிலையில் அங்குள்ள தங்குமிடங்கள், உள்ளூர் உணவுகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை ரசிப்பதற்கான செலவுகள் அனைத்தும் இந்திய மதிப்பில் கணக்கிடும்போது மிகவும் மலிவாக முடிகிறது. சர்வதேசப் பயணங்களை விரும்பும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, தங்களின் பணப்பையை பதம் பார்க்காமல் வெளிநாட்டுத் பயணக் கனவை நிறைவேற்றிக் கொள்ள உஸ்பெகிஸ்தான் ஒரு மிகச்சிறந்த தேர்வாகத் திகழ்கிறது.