சமூக வலைத்தளங்களில் விதவிதமான நகைச்சுவை மற்றும் சாகச வீடியோக்கள் வைரலாவது வழக்கம் என்றாலும், சில நேரங்களில் பார்ப்போரின் நெஞ்சை உறைய வைக்கும் விபத்து வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சினிமாப் படங்களைப் பார்த்துவிட்டு நிஜ வாழ்க்கையிலும் அதுபோலவே சாகசம் செய்ய முயன்று, ஆபத்தில் சிக்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்குச் சான்றாக, தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி வைரலாகி வரும் ஒரு விபத்து வீடியோ ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு நபர் நின்று கொண்டிருக்கிறார். அதற்கு மிக அருகிலேயே மற்றொரு வீட்டின் சிறிய பால்கனி போன்ற பகுதி உள்ளது. அங்கிருக்கும் மற்றொரு நபர், மாடியில் இருக்கும் நபரின் கையைப் பிடித்துக் கொண்டு, அந்த வீட்டின் மொட்டை மாடிக்குத் தாவ முயல்கிறார்.
भाई की किस्मत अच्छी थी… नीचे का ही टिकट कटा, ऊपर का नहीं! 😮😮😮 pic.twitter.com/rCOPy32JvV
— HasnaZarooriHai🇮🇳 (@HasnaZaruriHai) June 30, 2026
சினிமா பாணியில் ஒரு கையால் இன்னொருவரின் மொத்த எடையையும் தாங்கி மேலே இழுப்பது நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லை என்பதை அந்த இளைஞர்கள் யோசிக்கவில்லை. அடுத்த சில நொடிகளிலேயே எதிர்பாராத விதமாக இருவரின் கைகளும் நழுவின. இதனால் பால்கனியில் நின்றிருந்த நபர், கண் இமைக்கும் நேரத்தில் மாடியிலிருந்து நேராகக் கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக, கீழே விழுந்த அந்த வாலிபருக்குப் பலத்த காயம் ஏற்பட்டதே தவிர, உயிர் தப்பினார். @HasnaZaruriHai என்ற எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். “இன்று எமதர்ம ராஜா லீவு போல, அதான் தப்பிச்சிட்டான்”, “நெஞ்சே பதறிடுச்சு, கடவுள் புண்ணியத்துல உயிர் பிழைச்சான்” என நெட்டிசன்கள் தங்களின் அதிர்ச்சியை கமெண்ட்டுகளில் கொட்டி வருகின்றனர்.
