இசைஞானி இளையராஜா சமீப காலமாகவே தன்னுடைய பாடல்களுக்கு உரிமை கோரி வருகிறார். அவருடைய அனுமதி இல்லாமல் பாடல்களை யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கேட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் தான் இசை அமைத்த 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கு தான் சொந்தம் எனக் ஒரே டெல்லி உயர்நீதிமன்றத்தில் சரிகமப வழக்கு தொடர்ந்தது. இந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து இந்த உரிமையை தாங்கள் பெற்றதாக சரிகமப தன்னுடைய வழக்கில் குறிப்பிட்டு இருந்த நிலையில் இளையராஜா தரப்பில் இது தன்னுடைய சொந்த பாடல்கள் எனக் கூறி பிற தளங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது சட்ட விரோதம் என வாதிட்டது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சரிகமப வாதத்தை ஏற்றுக் கொண்டதோடு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் டெல்லி ஹை கோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரிகமப நிறுவனத்திற்கு சாதகமான இடைக்கால தடையை நீக்க முடியாது என அதிரடியாக தெரிவித்துவிட்ட நிலையில் 16 வயதினிலே, முள்ளும் மலரும் உள்ளிட்ட 136 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என கூறி தீர்ப்பு வழங்கியது.
