மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள டி.என். நகரில் 700 சதுர அடி கொண்ட வீட்டிற்கு மாதம் 2 லட்சம் ரூபாய் வாடகை செலுத்துவதாகப் பெண் ஒருவர் தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்யா கோத்தாரி என்ற இன்ஃப்ளூயன்ஸர் எடுத்த இந்த வீடியோவில், அந்தப் பெண் தான் வசிக்கும் 2 BHK வீட்டைச் சுற்றிக் காண்பிக்கிறார்.

இந்த வாடகையில் உணவு, சலவை மற்றும் தினசரி வீட்டு பராமரிப்பு போன்ற அனைத்து வசதிகளும் உள்ளடங்கியுள்ளதாக அவர் விளக்குகிறார். அந்தப் பகுதியில் பல கல்லூரி மாணவர்கள் வசிப்பதால் வாடகை மிகவும் அதிகமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

நான் மும்பைக்கு வரும் மாணவர்களுக்குத் தங்குமிடம் மற்றும் விடுதிகளைத் தேடிக்கொடுக்கும் வேலையைச் செய்வதாகவும், இரண்டு மாதங்கள் கடுமையாக உழைத்தால் மீதமுள்ள எட்டு மாதங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Arya Kothari (@arya_kothari)

“>

மும்பையில் வசதியாக வாழ ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வருமானம் தேவை என்று குறிப்பிடும் அந்தப் பெண், தனது வருமானம் குறித்து வெளிப்படையாகப் பேச மறுத்துவிட்டார். இந்த வீடியோ, மும்பையின் அதீத வீட்டு வாடகை மற்றும் அங்குள்ள வாழ்க்கைச் செலவுகள் குறித்த விவாதத்தை இணையத்தில் மீண்டும் தூண்டியுள்ளது.