தாகத்துடன் இருந்த வாயில்லா ஜீவன் நாயின் உணர்வை புரிந்துகொண்ட அன்பான பள்ளி மாணவி, அது தண்ணீர் குடிக்க உதவும் வகையில் குழாயைத் திறந்துவிட்டு அதன் தாகத்தைத் தணித்துள்ள அசாத்திய நெகிழ்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் நெகிழ வைத்துள்ளது.

சாலையில் தாகத்தால் தவித்து, தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு வாயில்லா ஜீவனின் தேவையை, அந்தப் பள்ளி மாணவி தனது மழலை மாறா அன்பால் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு, சிறிதும் தயக்கமின்றி ஓடிச் சென்று அங்கிருந்த தண்ணீர்க் குழாயைத் திறந்து உதவி செய்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் மனிதநேயம் குறைந்து வரும் சூழலில், ஒரு பள்ளிச் சிறுமி காட்டியுள்ள இந்த அசாத்திய கருணையும், அவளது அருமையான குழந்தை வளர்ப்பும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு ஆகச்சிறந்த வாழ்வியல் பாடமாக அமைந்துள்ளது.

 

“>

வாயில்லா ஜீவனின் ஆபத்தான நிலையைப் புரிந்து கொண்டு சாதுரியமாகச் செயல்பட்ட அந்த அன்பான சிறுமியின் நல்மனதைப் பாராட்டி, தற்போது சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.