பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில், முகமது ரெய்ஹான் என்ற மோமோஸ் கடைக்காரர் இளம் மற்றும் மைனர் பெண்களை இலவசமாக மோமோஸ் கொடுத்து தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் அவர்களை பாங்கேதாம் மலையிலுள்ள ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு அழைத்துச் சென்று ஆபாசமாக வீடியோ எடுத்து, அதனை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை 10 ஆபாச வீடியோக்கள் கண்டறியப்பட்டுட்டுள்ளன.

இந்த வீடியோக்கள் கடந்த 15 நாட்களாக  பரவி வந்த நிலையில், ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்  காவல் நிலையத்தின் முன் திரண்டு தீவிர போராட்டம் நடத்தினர். இதன் பின்னரே போலீஸார், குற்றம் சாட்டப்பட்ட ரெய்ஹானுக்கு  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த குற்றவாளி ரெய்ஹான் மும்பைக்கு தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிப்பதற்காக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தற்பொழுது ஒரு மைனர் பெண் அடையாளம் காணப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இதில் மதமாற்ற சதி இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும்  இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரெய்ஹானின் மொபைல் போன் இன்னும் கிடைக்காததால், தற்பொழுது கிடைத்துள்ள டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.