கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மகாலட்சுமி லேஅவுட் பைப்லைன் சாலை பகுதியில், 23 வயதான அஞ்சலி என்ற இளம்பெண் அவரது முன்னாள் காதலர் ராஜீவ் என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், ராஜீவின் குற்றப் பின்னணி குறித்து தெரிந்ததும் அஞ்சலியின் குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அஞ்சலி காதலை முறித்துக் கொண்ட போதிலும், ராஜீவ் தொடர்ந்து திருமணம் செய்யும் மாறு வற்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு அஞ்சலியை உணவருந்த அழைத்த ராஜீவ், மீண்டும் திருமணம் செய்யும் மாறு கூறியுள்ளார். அதற்கு அஞ்சலி மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த ராஜீவ் அஞ்சலியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். படுகாயமடைந்த அஞ்சலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜீவை மகாலட்சுமி
