மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள புகழ்பெற்ற லோஹாகாட் கோட்டைக்கு வார இறுதி நாளில் பெய்த கனமழையை ரசிப்பதற்காக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்கள் குவிந்ததால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோட்டைக்குச் செல்லும் குறுகிய படிக்கட்டுகளில் மக்கள் எள் விழ இடமின்றி, மழையில் நனைந்தபடி நகர முடியாமல் தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
பருவமழைக் காலத்தில் இத்தகைய ஆபத்தான கோட்டைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ அல்லது கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளோ இல்லாததே இந்த அவலநிலைக்குக் காரணம் எனப் பாதுகாப்பு ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த வைரல் வீடியோவின் பின்னணியில் ‘சியா என்பவர் கேதனை எப்படி தள்ளிவிட்டார் என்பது குறித்து மலையேற்ற வீரர்கள் விசாரித்து வருகின்றனர்’ என்ற விசித்திரமான வாசகம் இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த வாசகம் கூட்ட நெரிசலில் நடந்த ஏதேனும் அசம்பாவிதத்தைக் குறிக்கிறதா அல்லது நெட்டிசன்களால் லைக்குகளுக்காகப் பரப்பப்படும் ஒரு ‘மீம்’ பாணி வதந்தியா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், கோட்டையின் குறுகிய பாதையில் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் அனுமதித்தது பெரும் ஆபத்தானது என்றும், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட சுற்றுலாத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
