இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியை நேரில் காண வந்திருந்தனர்.
அப்போது லண்டனில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் விராட் கோலியைப் பார்த்ததும், “நாங்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்”என்று அன்போடு கூப்பிட்டுள்ளார். இதைக் கேட்டதும் கோலி எவ்வித தயக்கமும் காட்டாமல், மிகுந்த புன்னகையுடனும் மனிதநேயத்துடனும் அந்த ரசிகரிடம் சென்று நலம் விசாரித்து கலந்துரையாடினார்.
VIDEO OF THE DAY 🥺❤️
– Virat Kohli making his fan happy at Lord’s.pic.twitter.com/rFQmqsAvtk
— Johns. (@CricCrazyJohns) June 28, 2026
“>
இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் பகையையும் தாண்டி, எல்லையைக் கடந்து விராட் கோலி காட்டிய இந்த அன்பும், எளிமையும் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் விளையாட்டு என்பது நாடுகளின் எல்லைகளைத் தாண்டி மனிதர்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் நிரூபித்துள்ளதாகப் பலரும் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியோடு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
