தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை அறிந்த ஒரு பெண், அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டார். இதற்கிடையில், கணவர் தனது கள்ளக்காதலியுடன் ஒரு பிரபலமான ரெஸ்டாரண்டில் நெருக்கமாக இருப்பதாகத் தகவல் கிடைக்கவே, ஆத்திரமடைந்த மனைவி உடனடியாக அந்த இடத்திற்கு அதிரடியாக நுழைந்தார். அங்கே அவர்களைப் பிடித்து வெளுத்து வாங்க வேண்டும் என்ற கோபத்தில் சென்றவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
கணவனுடன் மிக நெருக்கமாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் அந்த மனைவி அப்படியே உறைந்து போனார். ஏனெனில், தன் கணவனின் கள்ளக்காதலியாக அங்கே இருந்தது வேறு யாருமல்ல, அவளுடைய சொந்த கசின் (Cousin) தான்! தான் உயிராக நம்பிய கணவனும், தன் சொந்த காரியமான கசினும் சேர்ந்து தனக்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்ததை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
Una Mujer encuentra a su marido con su amante y cuando llega al restaurant se dio cuenta que era su prima. Entró en shock y tuvo un brote psiquiátrico automáticamente. Terminó internada pic.twitter.com/dOEaaEH0Kt
— Juan Domingo Underwood (@Ojo_Kritico) June 27, 2026
இந்த அதீத துரோகத்தின் வலியால் அடுத்த நொடியே கடுமையான மன அதிர்ச்சிக்கு உள்ளான அந்தப் பெண், அங்கேயே மனநலம் பிறழ்ந்து கத்தத் தொடங்கினார். சுயநினைவை இழந்த அவர், தற்போது மீட்கப்பட்டு மனநல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
