மும்பையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்ய வந்த பிரபல நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், இளம் பெண் ஒருவருக்கு ஆபாசமாகவும் அசிங்கமாகவும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ள அதிர்ச்சிச் சம்பவம்  நாடு முழுவதும் உள்ள பெண்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த நிஷா பாலகிருஷ்ணா என்ற பெண் ஜூன் 16 அன்று வீட்டில் இல்லாத நேரத்தில், ‘ஷாடோஃபாக்ஸ்’ (Shadowfax) என்ற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் டெலிவரி பாய் அவசர அவசரமாக போன் செய்துள்ளார்; அந்தப் பெண் போனை எடுக்காததால், அது நேராக அவரது மொபைலின் ‘வாய்ஸ்மெயில்’ (Voicemail) பகுதிக்குச் சென்றுள்ளது.

பின்னர் அந்த ஆடியோவைப் போட்டுக் கேட்ட அந்தப் பெண், அதில் இருந்த கொடூரமான ஆபாச வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார். அந்த ஆடியோவில், “மேடம், உங்க சத்தத்தைக் கேட்ட உடனே எனக்கு .. உங்க கூட..!” என்று அந்த டெலிவரி பாய் மிகக் கேவலமாகப் பேசியதுடன், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து ஆபாச மிரட்டல் விடுத்துள்ளார்.

தனது வீட்டின் முகவரி (Home Address) அந்த டெலிவரி பாய்க்குத் தெரியும் என்பதால், தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து நடுங்கிய அந்தப் பெண், உடனடியாக இந்த விவகாரத்தை ஆதாரத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மும்பை போலீசாருக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் டேக் செய்து நியாயம் கேட்டுள்ளார்.

சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கே இருக்கிறது பாஸ்?!” என்று கொந்தளித்து, அந்தப் பெண்ணின் வீட்டு முகவரியை வைத்துள்ள அந்த காமுகன் மீது மும்பை போலீசார் உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து உள்ளே தள்ள வேண்டும் என்று கமெண்ட் பாக்ஸில் அனல் பறக்கும் விவாதத்தை நடத்தி வருகின்றனர்.