இன்றைய காலகட்டத்தில் உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் பலரும் கடுமையான உடற்பயிற்சிகளையும், விலையுயர்ந்த உணவு முறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.

ஆனால், சென்னையைச் சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர், எவ்வித ஜிம் பயிற்சிகளும் இல்லாமல் மிக எளிமையான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ரகசியத்தைப் பகிர்ந்து இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

“>

மேலும் இவரது தினசரி உணவு முறையில் வெறும் 3 இட்லிகள் போன்ற எளிய சைவ உணவுகளும், உடற்பயிற்சிக்கு முக்கியமாக பேட்மிண்டன் விளையாட்டையும் மட்டுமே அவர் நம்பியுள்ளார். முறையான திட்டமிடல் மற்றும் தொடர் முயற்சியே ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுக்கான அஸ்திவாரம் என்பதை இவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இதனால் இளைஞர்களுக்கான தனது ஆலோசனையில், துரித உணவுகள் சைவமாக இருந்தாலும் அவை ஆரோக்கியத்தைக் கெடுக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்குமாறு அவர் எச்சரிக்கிறார். மேலும், மனஅழுத்தம் இல்லாமல் இருப்பதுடன், முறையான தூக்கமும், ஓட்டம், நடைப்பயிற்சி, ஸ்டிரெச்சிங் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டின் மூலம் உடலை வியர்க்க வைப்பதும் அனைத்து நோய்களிலிருந்தும் நம்மைக் காக்கும் என்று கூறுகிறார்.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி, 60 வயதிற்குப் பிறகு பேட்மிண்டன் போன்ற சுறுசுறுப்பான விளையாட்டுகளில் ஈடுபடுவது தசைகளின் வலிமையை மேம்படுத்தவும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களைத் தவிர்க்கவும், உடலின் சமநிலையை சீராகப் பராமரித்து வயதான காலத்தில் கீழே விழுந்து ஏற்படும் காயங்களைத் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது.