கடை பொறுப்பாளர் ஒருவரின் கண் முன்னே அவரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, ஒரு நூதன மோசடிக்காரன் தரையோடு தரையாகப் படுத்துக்கொண்டு செய்த அசாதாரண சூழ்ச்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களை ஒட்டுமொத்தமாக வாயடைத்துப் போகச் செய்துள்ளது.

இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்த வைரல் வீடியோவில், அந்த நபர் கடையின் தரையிலேயே படுத்துக்கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி மிகத் தந்திரமாக வழி நெடுகிலும் படுத்துக்கொண்டே நகர்ந்து சென்றுள்ளார்; அங்கிருந்த பெரிய கடையின் பொறுப்பாளருக்குச் சிறிதும் சந்தேகம் வராதபடி மிக லாவகமாகக் காய் நகர்த்திய அந்த நபர், தான் நினைத்த
பொருளை எவ்வித பதற்றமும் இன்றி கச்சிதமாக எடுத்துவிட்டு, மீண்டும் அதே பாணியில் படுத்துக்கொண்டே அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளார்.

அந்த நபர் தான் நினைத்த காரியத்தை சாதித்துக் கொண்டு அங்கிருந்து மிக எளிதாக மறைந்தாலும், அவன் செய்த அந்தத் தைரியமான விசித்திரமான திருட்டு முயற்சி அனைத்தும் அங்கிருந்த கேமராவில் அச்சுப்பிசகாமல் மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.

 

“>

பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது இந்த வீடியோ  இணையவாசிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.