“நாங்க தப்பிச்சு ஓடப் பார்த்தா எங்களைக் கடிக்கிறதுக்குன்னே ரெண்டு பயங்கரமான பிட்புல் நாய்களை வளர்த்து வச்சிருந்தாங்க சார்; வேலைக்குன்னு கூட்டிட்டு வந்து எங்களோட போன்களையெல்லாம் பிடுங்கி வச்சுக்கிட்டு, ஒரு நாளைக்கு ஒரே ஒரு தவிட்டு ரொட்டியைக் குடுத்து, இரும்பைக் காய்ச்சி உடம்புல வச்சுக் கொடூரமா சித்திரவதை பண்ணிட்டாங்க!”

என்று உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகர் கொத்தடிமைத் தொழிற்சாலையிலிருந்து தப்பித்து வந்த தொழிலாளி ஒருவர் காவல்துறையிடம் கண்ணீருடன்  வாக்குமூலம் அளித்தது ஒட்டுமொத்த தேசத்தையும் அடியோடு உலுக்கியுள்ளது.

முசாஃபர்நகர் திதாவி காவல் எல்லைக்குட்பட்ட மண்டி கிராமத்தில் உள்ள டோனா தொழிற்சாலையில், சுமார் 10,000 ரூபாய் சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பீகார், நேபாளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களைக் கடத்தி வந்து இரண்டு ஆண்டுகளாகப் பணயக்கைதிகளாக அடைத்து வைத்திருந்த  கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தப்பி ஓட முயன்ற தொழிலாளர்களைப் பெல்ட்டால் அடித்துக் காதுகளை அறுத்ததும், ஃபேன் பெல்ட்டுகளைச் சவுக்காக மாற்றி விலா எலும்புகள் உடையுமளவுக்கு அடித்தும் , இதில் மூன்று தொழிலாளர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுச் சாக்கில் கட்டி வீசப்பட்டதும் மாவட்ட எஸ்பி தலைமையிலான தனிப்படையினரின்சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“>

 

தற்பொழுது அந்த நரகக் குழியிலிருந்து 12 தொழிலாளர்களைப் போலீசார் அதிரடியாக மீட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான தொழிற்சாலை உரிமையாளர் அங்கித் பாலியனைப் பிடிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு தேடுதல்  வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளது.