ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 33 வயதான அங்குஷ் என்ற இளைஞர், தனது விரதத்தை முடிப்பதற்காக ‘ஃப்ரூட்டி’ குளிர்பானத்தைக் குடித்த சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வியாழக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அந்த பாக்கெட் குளிர்பானத்தை அவர் அருந்தியுள்ளார். குடித்த சில நிமிடங்களிலேயே அவருக்கு கடுமையான வயிற்று வலியும் தொடர்ந்து வாந்தியும் ஏற்பட்டு, உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், ஃபரிதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அதோடு அங்கிருந்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக டெல்லி சஃப்தர்ஜங் (Safdarjung) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், டெல்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அங்குஷின் உயிர் பிரிந்தது.

இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்பிற்கான உண்மையான காரணம் முழுமையாகத் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.