“60 வருஷமா திமுக கூடவே இருந்தோம் , ஆனா இந்தத் தேர்தல்ல எல்லா பக்கமும் ஒரே விசிலா ஊதப்பட்டு தவெக ஜெயிச்சிருச்சு, அதனாலதான் நாங்க அந்த முடிவை எடுத்தோம் !”

என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் காதர் மொகிதீன் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்து விலகியதற்கான அசல் காரணத்தை உடைத்திருப்பது அறிவாலய வட்டாரத்தை அடியோடு அதிரவைத்துள்ளது.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து, தமிழக வெற்றிக் கழகம் அசுர வெற்றி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தாங்கள் எந்த நிபந்தனையும் இன்றி தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததாக அவர் விளக்கியுள்ளார்;

மேலும், தாங்கள் அமைச்சரவை பதவியைக் கேட்காதபோதும் தவெக தங்களை மதித்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க அழைத்ததாகக் குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்தப் பொதுக்குழுவும் விவாதித்து இறுதியாகத் தவெகவிற்கு ஆதரவு அளிப்பது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

60 ஆண்டு கால பந்தத்தை முறித்துக்கொண்டு, தவெக-வின் அசுர அலையை ஒப்புக்கொண்டு முஸ்லிம் லீக் வெளியேறியிருப்பது தமிழக அரசியல் போர்க்களத்தில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.