தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது மனிதநேய மக்கள் கட்சி (மமக) சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா புதிய அரசின் திட்டங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார்.
குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டமானது, தற்போதைய சூழ்நிலைக்குப் போதாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராகப் பெருகிவரும் காட்டுத் தீ போன்ற குற்றங்களை அணைப்பதற்கு, இந்தச் சிங்கப்பெண் திட்டம் ஒரு சிறு பனித்துளி போலத்தான் இருக்கிறது என்று அவர் சாடியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டுமானால், விரைவு விசாரணை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உளவியல் ஆலோசனைகள், சட்ட உதவிகள் மற்றும் முறையான மறுவாழ்வுத் திட்டங்கள் போன்றவை அவசியம் என்றும், ஆனால் இது போன்ற எந்தவொரு ஆக்கப்பூர்வமான திட்டங்களும் தற்போதைய ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்றும் எம்எல்ஏ ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்
