இந்தியாவில் முதல்முறையாகப் பணியில் சேர்ந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) கணக்கில் இணைந்த 15 லட்சம் புதிய பணியாளர்களுக்கான மெகா ஊக்கத்தொகையை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 19) நேரடி பணப்பரிமாற்றம் (DBT) மூலம் விடுவிக்க உள்ளார். ‘பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரத வேலைவாய்ப்பு திட்டத்தின்’ (PM-VBRY) கீழ், தகுதியான இளைஞர்களுக்கு இரண்டு தவணைகளாக அதிகபட்சம் 15,000 ரூபாய் வரை இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

​இத்திட்டத்தின்படி, புதிய வேலையில் சேர்ந்து தொடர்ந்து 6 மாதங்கள் நிறைவு செய்துள்ள ஊழியர்களின் வங்கி கணக்கில் முதல் தவணையாக 7,500 ரூபாய் இன்று வரவு வைக்கப்பட உள்ளது. அதேபோல், பணியில் சேர்ந்து ஒரு வருடம் (12 மாதங்கள்) நிறைவடைந்து, நிதி கல்வியறிவுப் பயிற்சியை முடித்திருந்தால், இரண்டாவது தவணையாக மேலும் 7,500 ரூபாயை மத்திய அரசு அவர்களின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கும்.

ரூபாய் 1 லட்சம் வரை மாதச் சம்பளம் பெறும் புதிய ஊழியர்களை இலக்காகக் கொண்டு, வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த அதிரடித் திட்டம் தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.