“ஓடிக்கொண்டிருக்கும் புல்லட் பைக்கின் ஹேண்டில்பாரைக் கைகளால் பிடிக்காமல், பின் இருக்கையில் சௌகரியமாக அமர்ந்தபடி நபர் ஒருவர் பயணம் செய்யும் ஆபத்தான வீடியோ காட்சி!” தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிப் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் dileep.arc என்ற கணக்கின் மூலம் பதிவிடப்பட்டு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவில், சர்தார்ஜி ஒருவர் பைக்கின் முன் இருக்கையை விடுத்து பின் இருக்கையில் ஒரு கால் மீது மற்றொரு காலைப் போட்டுக்கொண்டு அமர்ந்துள்ளார்.

வீடியோவை எடுப்பவர் அவருக்குப் பயமாக இல்லையா என்று கேட்கும் அளவிற்கு அந்தப் பயணம் ஆபத்தானதாக அமைந்துள்ளது. இக்காட்சிகளைப் பார்த்த நெட்டிசன்கள், இதனை ‘கோஸ்ட் ரைடர்’ என்றும் ‘தானியங்கி முறை’ என்றும் வேடிக்கையாகக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

<a href=”http://

“>

எனினும், இந்தச் செய்தியில் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் சமூக ஊடகப் பதிவுகளின் அடிப்படையிலானவையே தவிர, இதனை ஊடகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதும், இத்தகைய ஆபத்தான பயணங்கள் சாலைப் பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என்பதும் குறிப்பிடத்தக்கது.