சிங்கப்பெண் அதிரடி படை விழாவில், தவெக எம்.எல்.ஏ பல்லவி தனது சில வாரங்களே ஆன கைக்குழந்தையுடன் கலந்துகொண்டது பெரிய விவாதமாக மாறியுள்ளது. பிரபலமாவதற்கும் விளம்பரத்திற்கும் மட்டும்தான் அவர் குழந்தையைப் பொதுவெளியில் தூக்கி வருகிறார் என திமுகவினர் சமூக வலைத்தளங்களில் மிக அநாகரீகமாக விமர்சித்து வசைபாடி வருகின்றனர்.
இன்னும் ஒருபடி மேலே போய், பல்லவியை ‘ரவுடி, மூளை வளர்ச்சி இல்லாதவர், ரீல்ஸ் வெறி பிடித்தவர்’ என்றும், ‘பாரதி கண்ணம்மா சீரியல்’ ரேஞ்சுக்கு சீன் காட்டுகிறார் என்றும் திமுக உடன்பிறப்புகள் எல்லை மீறிய வார்த்தைகளால் தாக்கிப் பேசுகின்றனர். ஒரு பெண் என்றும் பாராமல் கைக்குழந்தையை வைத்து அரசியல் நாகரீகமே இல்லாமல் இப்படித் தரம் தாழ்ந்து விமர்சிப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
