திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள நீட் தேர்வில் (NEET Exam) மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவி நவ்யா ஸ்ரீயின் இல்லத்திற்கு, தமிழக அமைச்சர் ஆதவ் அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அந்த எளிய நடுத்தரக் குடும்பத்தின் அன்பான அழைப்பை ஏற்று, அவர்களின் வீட்டிலேயே வாழை இலையில் அமர்ந்து மதிய உணவருந்த அமைச்சர் ஆதவ் சம்மதித்துள்ளார்.
உணவருந்த அமர்ந்த போதுதான் அங்கு ஒரு சுவாரசியமான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவியின் குடும்பத்தினர் அமைச்சருக்கு உணவு பரிமாற முயன்ற போது, அவர்களைத் தடுத்த அமைச்சர், “நான் ஹாஸ்ட்டல்ல வளந்தவன் எனக்கு காய்கறிலாம் எடுத்து போட்டு பழக்கம், நானே வைக்கிறேன்” என்று மிகவும் எதார்த்தமாகப் பேசி, தமக்கான உணவைத் தாமே பரிமாறிக் கொண்டுள்ளார்.
”நான் ஹாஸ்ட்டல்ல வளந்தவன் எனக்கு காய்கறிலாம் எடுத்து போட்டு பழக்கம், நானே வைக்கிறேன்".. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவி நவ்யா ஸ்ரீ வீட்டிற்க்கு சென்று வாழை இலையில் உணவருந்திய அமைச்சர் ஆதவ்.. உணவு பரிமாறியும் மகிழ்ச்சி..!… pic.twitter.com/oA7s61he7J
— Polimer News (@polimernews) June 12, 2026
அதுமட்டுமன்றி, அங்கிருந்தவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியோடு உணவு பரிமாறியுள்ளார். அமைச்சரின் இந்த எளிமையான மற்றும் பாசமான அணுகுமுறை, அங்கிருந்தவர்களை நெகிழ வைத்ததோடு, இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் அல்காரிதத்தை அதிரவைத்து, அதிகப்படியான ஷேர்களுடன் பயங்கர வைரலாகி வருகிறது.
