உலகிலேயே அதிக குழந்தைகளுக்குத் தாயானவர் என்ற சாதனையைப் படைத்தவர் 18-ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் வாழ்ந்த வாலண்டினா வாசிலியேவா. ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1725 முதல் 1765 வரையிலான 40 ஆண்டுகளில் 27 முறை பிரசவித்துள்ளார்.

இதில் 16 முறை இரட்டையர்கள், 7 முறை மும்மறையர்கள் மற்றும் 4 முறை நான்கு குழந்தைகளை என மொத்தம் 69 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். அக்காலகட்டத்தில் நவீன மருத்துவ வசதிகள், மருந்துகள் எதுவுமே இல்லாத சூழலிலும், 67 குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்தது மருத்துவ வரலாற்றில் ஒரு வியக்கத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த வியக்கத்தக்க சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. வாலண்டினாவின் கணவர் ஃபியோதோர் வாசிலியேவ், தனது இரண்டாவது மனைவி மூலமாகவும் குழந்தைகளைப் பெற்று, மொத்தம் 87 குழந்தைகளுக்கும் தந்தை என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார்.

&

 

View this post on Instagram

 

A post shared by Science Enthusiast (@scienceoftheuniverse)

“>nbsp;

இன்றைய நவீன மருத்துவ அறிவியல் வளர்ச்சியில் கூட இத்தகைய எண்ணிக்கையிலான பிரசவங்கள் சாத்தியமற்றதாகவே பார்க்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் சிலர் இதை வியப்புடன் பார்த்தாலும், அக்கால ஆவணங்கள் இந்த அசாதாரணத் தகவலை உறுதிப்படுத்துகின்றன.