கடந்த 2011-2016 அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், கட்டுமான அனுமதி வழங்க ₹27.9 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்திருந்தது. ஆனால், அவர் எடப்பாடி அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஒரே மாதத்தில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி ஜூன் 4-ஆம் தேதி இந்த வழக்கு திடீரென முடித்து வைக்கப்பட்டது. இந்த அதிரடி நகர்வு, லஞ்ச வழக்கை ஆயுதமாகப் பயன்படுத்தி வைத்திலிங்கத்தை திமுக மிரட்டித் தன் பக்கம் இழுத்துள்ளதோ என்ற பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

​திமுகவில் சேர்ந்தவுடன் இவ்வளவு பெரிய ஊழல் வழக்கு அவசர அவசரமாக அமுக்கப்பட்டதில் கடுமையான பின்னணி இருப்பதாக ‘அறப்போர் இயக்கம்’ தற்பொழுது பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காகவே லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை முடித்துள்ளது என்றும், இதன் பின்னால் ஆளும்கட்சியின் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் எழுந்துள்ள அதிரடிப் புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.