சென்னை மாநகரப் பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்யும் அதிரடி நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களின் ஓரங்களில் தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு உண்டாகிறது.
இதனைத் தடுக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் 24 மணி நேரத்திற்குள் தங்களது வாகனங்களைச் சாலையோரங்களில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிரடி கெடு விதித்துள்ளது. இந்தக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாகனங்களை அகற்றாவிட்டால், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து அந்த வாகனங்களை அதிரடியாகப் பறிமுதல் செய்யவுள்ளதாகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும் மாநகராட்சி ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளது. சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த அறிவிப்பு, சென்னை வாகன உரிமையாளர்கள் மத்தியில் தற்சமயம் பெரும் பரபரப்பையும் திக் திக் நிமிடங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
