15 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய டி-20 அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஐபிஎல் தொடரில், 237 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து வைபவ் சாதனை படைத்தார்.
இதில் ஒரு சதமும் அடங்கும். மேலும் ஒரே ஐபிஎல் சீசனில் 70-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை விளாசி, ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார். வைபவ்வின் இந்த அசுர வளர்ச்சியால் அவரது குடும்பத்தினர் தற்போது பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், வைபவ்வின் சகோதரர்களான உஜ்வல் மற்றும் ஆசிர்வாத் ஆகியோர் தங்களது கிராமத்தில் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைபவ்வின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தனது இளைய மகன் ஆசிர்வாத்தும் வைபவ் போலவே அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடியவர் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
View this post on Instagram
“>
இன்னும் இரண்டு ஆண்டுகளில் அவனையும் ஐபிஎல் போட்டிக்குத் தயார் செய்துவிடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், அதே நேரத்தில் வைபவ் போன்ற அசாத்திய திறமை கொண்ட ஒரு வீரர் அடிக்கடி உருவாவது கடினம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
