இரவு 11 மணிக்கு உணவு டெலிவரி செய்ய வந்த சொமாட்டோ ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரான பெண் ஒருவரிடம் அநாகரிகமாகப் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்னியா விக் என்ற பெண், தான் ஆர்டர் செய்த பொருளைப் பெற்றுக்கொள்ளச் சென்றபோது, அந்த டெலிவரி ஊழியர் அவர் ஆர்டர் செய்த பொருள் மற்றும் அவரது வயது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தச் செயல் தனக்கு மிகுந்த பாதுகாப்பற்ற உணர்வைத் தந்ததாக அந்தப் பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், புகாரளித்தால் அந்த நபருக்குத் தனது வீட்டு முகவரி தெரிந்திருப்பதால், அது தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமோ என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
இதனால் வாடிக்கையாளர்களின் விவரங்கள் டெலிவரி செய்பவர்களுக்குத் தெரிவது குறித்தும், அவர்கள் இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பதன் அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் குறித்து சொமாட்டோ நிறுவனம் விசாரிக்கப்படும் என்று பதிலளித்துள்ளது.
