சமூக வலைதளங்களில் தற்போது ஒரு விசித்திரமான உணவு கலவை வைரலாகி வருகிறது. ‘மாச்சா ஜிலேபி’ மற்றும் ‘ஸ்ட்ராபெரி லஸ்ஸி’ ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வழக்கமான இனிப்பு சுவை கொண்ட ஜிலேபியை, புளிப்பு கலந்த ஸ்ட்ராபெரி லஸ்ஸியில் நனைத்து சாப்பிடும் இந்த வினோதமான காம்பினேஷனைப் பார்த்த நெட்டிசன்கள், அதிர்ச்சியில் தங்களது தலையில் கைவைத்துக்கொண்டு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
“matcha jalebi with strawberry lassi”
words i never expected to put in that order pic.twitter.com/YYlovkcf9n— vani (@paneerchillli) June 4, 2026
“>
இதனால் உணவுப் பிரியர்கள் விதவிதமான சோதனைகளைச் செய்வது புதிதல்ல என்றாலும், இந்த வீடியோ பலரது அருவருப்பையும் கோபத்தையும் தூண்டியுள்ளது. “உணவை ஏன் இவ்வளவு மோசமாகச் சிதைக்கிறீர்கள்?” என்பது போன்ற எதிர்மறையான கருத்துக்களே சமூக வலைதளங்களில் அதிகம் காணப்படுகின்றன.
