சமூக வலைதளங்களில் ஒரு பெரிய திறந்தவெளி மண்டபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, சோகப் பாடலுக்கு நடனமாடி, அழுது, பாடி தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வினோதமான காணொளி ஒன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பின்னணியில், “ஒரு பெண் இருந்தாள், அவள் மீது எனக்குக் காதல் இருந்தது” என்ற உடைந்த இதயங்களின் சோகப் பாடல் ஒலிக்க, அங்கிருக்கும் இளைஞர்கள் பலர் மது போதையில் தள்ளாடியபடியும், சிலர் தரையில் படுத்து அழுதுகொண்டும் தங்களது முன்னாள் காதலர்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by येडा पक्या 💢comedy boy 😎😅 (@prakash__gangad__1)

“>

முதல் பார்வையில் இது ஏதோ ஒரு சாதாரண பார்ட்டி போலத் தோன்றினாலும், வீடியோ செல்லச் செல்ல அது காதலில் தோற்று மனமுடைந்த காதலர்களின் வினோதமான ஒன்றுகூடல் என்பது தெளிவாகிறது.

தங்களது முடிக்கப்படாத காதல் கதையின் வலியை மறக்க, அனைவரும் ஒன்று கூடி தங்களுக்குரிய பாணியில் நடனமாடியும், சிலர் தங்கள் சோகத்தை மறைக்க சிரித்துக் கொண்டும் இருக்கும் இந்தக் காட்சி பார்ப்பவர்களை ஒரு கணம் வாயடைக்கச் செய்வதோடு,சிரிப்பையும் வரவழைக்கிறது.

காதல் தோல்விக்குப் பின் மக்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு உதாரணமாக இருக்கும் இந்தக் காணொளிக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கலவையான கருத்துக்களைத் தெரிவித்து இணையத்தில் செம வைரலாக்கி வருகின்றனர்.