முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கவுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் அவரைப் பாராட்டி அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலையின் நேர்மை, தேசப்பற்று மற்றும் பொதுச்சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெகுவாகப் பாராட்டியுள்ள அவர், சொந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள அண்ணாமலையின் முடிவை மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணாமலைக்குத் தமிழக அரசியலில் மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளதாகவும், அவர் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவராகஉருவெடுப்பார் என்றும் பவன் கல்யாண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் புதிய பாதையை வகுத்து, இளைஞர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அண்ணாமலையும் தற்போது பாஜகவை கழட்டிவிட்டு தனிக்கட்சி தொடங்கவுள்ளதால், தமிழக அரசியலில் புதிய ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது.
விஜய், அண்ணாமலை என இரு இளம் தலைவர்கள் தங்களது தனிப்பாதையில் களம் காண்பது, வரும் பொதுத்தேர்தலில் மிகப்பாரியஅரசியல் மாற்றத்திற்கான களத்தை உருவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்
