“இந்திய ரயில் பயணங்களின் போது அரங்கேறும் சுவாரஸ்யமான சம்பவங்கள் இணையத்தில் எப்போதுமே செம்ம வைரலாவது வழக்கம் தான் என்றாலும், தற்போது எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில்  ஒரு வீடியோ ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் அதிர வைத்து வருகிறது.

ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில், ரயிலின் கதவை விட பல மடங்கு பெரியதாக இருக்கும் ஒரு ராட்சதப் பெட்டியை உள்ளே ஏற்ற ஒரு கும்பலே ஒன்று திரண்டு பல மணி நேரமாகப் போராடுகிறது; பெட்டியைச் சாய்த்து, திருப்பி, கீழிருந்து தள்ளி என என்னென்னவோ வித்தைகளைச் செய்தும் அந்தப் பெட்டி வாசற்படியிலேயே மாட்டிப் படுத்தி எடுக்கிறது.

அனைவரும் கைகளைக் காலைகளைப் பிசைந்து கொண்டு ‘இனி இதை உள்ளே ஏத்தவே முடியாதுப்பா!’ என்று தைரியத்தை இழந்து சோர்ந்து நின்ற அந்த உச்சக்கட்டப் பரபரப்பான சூழ்நிலையில், அங்கே வந்த ஒரு பெண் ஒற்றை ஆளாக அதிரடி தந்திரத்தைக் கையாண்டு, அந்தப் பிரம்மாண்டப் பெட்டியை லாவகமாகத் தன் தலையில் தூக்கிச் சுமந்து இறுதியில் ஒரு பெண் அதைத் தன் தலையில் சுமந்து செல்வது காணப்பட்டது.  ஒரு கும்பலே தோற்ற இடத்தில் ஒற்றைப் பெண் செய்த மேஜிக்.. “தலையில தூக்கி கொண்டு போய்ட்டாங்க.. கிளம்புங்க அவ்வளவுதான் முடிஞ்சது!”

“>

 

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், ‘அடேங்கப்பா, இது நம்ம இந்தியர்களுக்கே உரிய அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் அக்மார்க்  தைரியம்!’ என்று பாராட்டித் தள்ளி வருவதால், இந்த வீடியோ தற்போது மில்லியன் கணக்கான பார்வைகளைக் கடந்து தாறுமாறாக இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.”