“தமிழ்நாட்டில் போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு முதலமைச்சர் விஜய் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சென்னையில் சட்டம் – ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்த முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் டிஜிபி மற்றும் அமைச்சர்கள் நிர்மல்குமார், விக்னேஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாகத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத் தூண்களான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த போதை அரக்கனுக்கு அடிமையாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறையினரை அறிவுறுத்தினார்.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளைத் தாமதமின்றி தீர்த்து, மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு அதிரடி கமாண்ட் கொடுத்துள்ளார்.”