உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் பி.எட். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக ஏராளமான மாணவர்கள் எச்.என். மிஸ்ரா பிஜி கல்லூரி தேர்வு மையத்திற்குச் சென்றிருந்தனர். தேர்வுக்குச் செல்வதற்கு முன்பாக, தங்களின் முக்கிய ஆவணங்களை நகல் எடுப்பதற்காக, தேர்வு மையத்தின் அருகிலிருந்த ஒரு கடையின் முன் ஏராளமான மாணவர்கள் திரண்டிருந்தனர்.

அந்த கடையின் முன்புறம் இருந்த பழைய சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மேல்தளம் மீது அளவுக்கு அதிகமானோர் நின்றதால், பாரம் தாங்காமல் அந்த மேல்தளம் திடீரென உடைந்து சரிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

<a href=”http://

“>

இந்த எதிர்பாராத விபத்தில் சுமார் 20 முதல் 25 தேர்வர்கள் அப்படியே சாக்கடைக்குள் விழுந்தனர். விபத்தைக் கண்டதும் உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாக்கடையில் விழுந்த மாணவர்களைப் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சில மாணவர்களுக்கு மட்டுமே லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இருப்பினும், பல மாணவர்களின் உடைகள், புத்தகங்கள் மற்றும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சாக்கடை நீரில் நனைந்து வீணாகின. இந்த விபத்து குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.