தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக திருச்சி கிழக்குக்கு வருகை புரிந்துள்ளார். அதாவது தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் பெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக் கொண்ட முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி ராஜினாமா செய்தார்‌. இந்த நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்துள்ள முதல்வர் விஜய் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

 

இதற்கிடையில் செல்லும் வழியில் ஒருவர் மனு கொடுக்க காத்திருந்தபோது அதனை கவனித்த விஜய் தன் பாதுகாவலர் மூலமாக அந்த மனுவை பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் திருச்சி கிழக்கில் பிரச்சார வாகனத்தில் இருந்தபோது மேலே எற  முயன்ற முன்னாள் அமைச்சர்  கு.ப கிருஷ்ணன் தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை பாதுகாப்பாக பிடித்துக் கொண்ட முதலமைச்சர் விஜய் கை கொடுத்து மேலே தூக்கி விட்டார். மேலும் இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.