தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக திருச்சி கிழக்குக்கு வருகை புரிந்துள்ளார். அதாவது தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் பெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக் கொண்ட முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி ராஜினாமா செய்தார்‌.

இந்த நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்துள்ள முதல்வர் விஜய் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். இதற்கிடையில் திருச்சி கிழக்குக்கு வந்த போது ஒருவர் மனு கொடுப்பதற்காக காத்திருந்தார். வாகனத்தில் செல்லும்போது இதனை கவனித்த முதல்வர் விஜய் தன்னுடைய பாதுகாவலரிடம் கூறி உடனடியாக அந்த மனுவை பெற்றுக்கொண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரவேற்பை பெற்றுள்ளது.