உலகப் புகழ்பெற்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google), கொசுக்களால் பரவும் கொடிய நோய்களை சிம்பிளாக ஒழித்துக் கட்டுவதற்காக ஆய்வகத்தில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சுமார் 3.2 கோடி ஆண் கொசுக்களைப் பொதுவெளியில் பறக்கவிட அமெரிக்க அரசிடம் அனுமதி கோரியிருப்பது ஒட்டுமொத்த உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் இந்தக் கொசுப் படையை ஏவிவிடக் கூகுள் நிறுவனம்  திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வக ஆண் கொசுக்கள் பொதுவெளியில் இருக்கும் பெண் கொசுக்களுடன் இணையும்போது உருவாகும் முட்டைகள் பொரிக்காது என்பதால், கொசுக்களின் ஒட்டுமொத்த மக்கள் தொகை காலப்போக்கில் கிடுகிடுவெனக் குறைந்துவிடும் என்று விஞ்ஞானிகள் விவரித்துள்ளனர்.

இதன் மூலம் டெங்கு (Dengue), ஜிகா (Zika) போன்ற உலகையே அச்சுறுத்தும் ஆபத்தான நோய்களை மெகா அளவில் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த அதிரடிச் செய்தி, தற்பொழுது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி  வருகிறது.