உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில், தனது மனைவியைக் கொன்ற கணவர் மற்றும் அவருக்கு உதவிய பெண் தோழி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மே 24-ம் தேதி, பாலியா பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது 22 வயதான ப்ரீத்தி தேவி என்பது அடையாளம் காணப்பட்டது.
மேலும் ப்ரீத்தியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரது கணவர் சுன்னிலால் பிரஜாபதி மற்றும் அவரது தோழி ஷோபா சௌரசியா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், ப்ரீத்தியின் கணவர் சுன்னிலால், தனது பெண் தோழியுடன் இணைந்து திட்டமிட்டே இந்தக் கொலையைச் செய்தது தெரியவந்தது.
இதனால் ஷோபா, ப்ரீத்தியை ஆசை வார்த்தைகள் கூறி வெளியே அழைத்துச் சென்று, அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர், சுன்னிலாலும் ஷோபாவும் சேர்ந்து ப்ரீத்தியை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை புதரில் வீசிச் சென்றது விசாரணையில் அம்பலமானது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
