தமிழகத்தில் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் சீருடை அணிந்து அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் தங்களது கல்வி நிறுவன அடையாள அட்டையைக் காண்பித்து அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

​புதிய கல்வி ஆண்டிற்கான இலவசப் பேருந்து பயண அட்டை (Bus Pass) தயாரித்து வழங்குவதற்கு இன்னும் சில வாரங்கள் அவகாசம் தேவைப்படும் என்பதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ் வரும் வரை, மாணவர்கள் சீருடை அல்லது ஐடி கார்டை வைத்தே ஜம்முனு அரசுப் பேருந்துகளில் பயணித்துக் கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.