வியட்நாம் நாட்டில் தனது மனைவி கேட்ட பொருட்களை வாங்குவதற்காக, மூடிக்கொண்டிருந்த மருந்துக் கடையின் ஷட்டருக்குள் கடைசி நொடியில் கணவன் ஒருவர் அசாத்தியமாக ஊர்ந்து உள்ளே நுழைந்த சுவாரசியமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களைப் பயங்கர குஷியாக்கியுள்ளது.
அந்த நபர் தனது மனைவி கேட்ட மிக முக்கியமான சில பொருட்களை வாங்குவதற்காக அவச அவசரமாக மருந்துக் கடைக்கு ஓடி வந்துள்ளார், ஆனால் அவர் வருவதற்குள் கடையின் ஊழியர்கள் ஷட்டரை வேகமாக மூடத் தொடங்கியுள்ளனர்.
A Vietnamese husband dramatically crawls under a closing pharmacy shutter at the last second just to buy his wife’s stuff and avoid getting scolded till morning.
Absolute legend. 😂
pic.twitter.com/FBYbSsg5Yg— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 29, 2026
ஒருவேளை பொருட்களை வாங்காமல் வெறும் கையோடு வீட்டிற்குச் சென்றால், விடிய விடிய மனைவியிடம் இருந்து விழப்போகும் மெகா அர்ச்சனை மற்றும் திட்டுகளுக்குப் பயந்த அந்த கணவன், சற்றும் யோசிக்காமல் மூடிக்கொண்டிருந்த ஷட்டரின் மிகக் குறுகிய கேப்பிற்குள் கடைசி வினாடியில் டாப் கியரில் தரையோடு தரையாக ஊர்ந்து உள்ளே புகுந்து சாகசம் செய்துள்ளார்.
மனைவியின் கோபத்திற்குப் பயந்து அந்த கணவன் செய்த இந்த அதிரடிப் பாசப் போராட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், “இவர்தான் உலகிலேயே பெஸ்ட் கணவன்” என்றும், “மனைவியின் திட்டிற்குப் பயந்து மனிதர் என்னவொரு அசுர வேகம் காட்டியுள்ளார்” என்றும் நெட்டிசன்கள் வளைத்து வளைத்துக் கமெண்டுகளைத் தட்டிவிட்டு செம ஜாலியாக லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.
