கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற வாலிபர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு ஓட்டுநர் வேலைக்குச் சென்ற இடத்தில், எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் அரபு நாட்டுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இந்த வழக்கில் அப்துல் ரஹீமிற்கு சவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவரைத் தூக்குக் தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டுமானால், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி ரூபாய் ‘பிளட் மணி’ (இழப்பீடு) செலுத்த வேண்டும் என சவுதி தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது.
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நபருக்கு ரூ.34 கோடி செலுத்தி தாயகம் மீட்டு வந்த கேரள மக்கள்..
20 ஆண்டுகளாக சிறையிலேயே இருந்த அப்துல் ரஹீம், தண்டனை ரத்து செய்யப்பட்டு சொந்த ஊருக்கு வந்ததால் நெகிழ்ச்சி#saudiarabia #abdulrahim #keralaman #returnshome pic.twitter.com/bFMNj7xYE4
— Thanthi TV (@ThanthiTV) May 29, 2026
ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமால் அவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியாத சூழலில், ஒட்டுமொத்த கேரள மக்களும், சமூக அமைப்புகளும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மலையாளிகளும் ஒன்றிணைந்து ‘Save Abdul Rahim’ என்ற மொபைல் ஆப் மூலம் அதிரடியாக நிதியைத் திரட்டினர். குறுகிய காலத்திலேயே 34 கோடி ரூபாய் முழுமையாகத் திரட்டப்பட்டு சவுதி நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டதால், அவரது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, கடந்த 20 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த அப்துல் ரஹீம் தற்போது விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் தனது தாயைக் கட்டியணைத்து அவர் கண்ணீர் விட்ட எமோஷனல் காட்சிகள் நெட்டிசன்களை நெகிழ வைத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
