மகாராஷ்டிரா பகுதியில், சமூகக் கட்டுப்பாடுகளை மீறி காதல் உறவில் இருந்த மாற்றாந்தாய் மற்றும் மகன் ஆகிய இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேஜ் தாலுகாவைச் சேர்ந்த சாஹேப்ராவ் பவார் என்பவரின் 21 வயது மகன் அனில் பவாருக்கும், அவரது 40 வயது மாற்றாந்தாய் அனிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தெலுங்கானாவுக்குத் தப்பிச் சென்ற நிலையில், மொபைல் சிக்னல் உதவியோடு போலீசாரும் குடும்பத்தினரும் அவர்களைக் கண்டுபிடித்து மீட்டனர்.

தங்களது உறவு உலகிற்குத் தெரிந்துவிட்டதால் ஏற்பட்ட அவமானத்திற்கும், பழிச்சொல்லுக்கும் அஞ்சி அனில் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நான்கு நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார்.

அனிலின் மரணச் செய்தியைக் கேட்டுத் தாங்க முடியாத அதிர்ச்சியடைந்த அனிதா, அதே மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு, இந்தத் துயரமான சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.